இந்த ஆண்டு மூன்று புதிய புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன.
ஒன்று, உக்ரையீனா. மெட்ராஸ் பேப்பர் வார இதழில் வெளிவந்த உக்ரைனின் அரசியல் வரலாற்றுத் தொடர்.
அடுத்தது, தொடு வர்மம். குறுங்கட்டுரைகளின் தொகுப்பு.
மூன்றாவது, வீட்டோடு மாப்பிள்ளை. உயிர்மை மாத இதழில் எழுதிய நகைச்சுவைப் புனைவு.
உண்மையில், இந்த ஆண்டு நான் வைத்திருந்த திட்டங்கள் வேறு. மெட்ராஸ் பேப்பர் ஆரம்பித்ததில் இருந்து அனைத்துத் திட்டங்களையும் அது மாற்றி எழுதிவிட்டது. அதனாலென்ன. கோலத்தைவிட அதைக் குழந்தை அழிப்பதே அழகு. ஒரு புதிய பத்திரிகை தொடங்கி, அதன் மூலம் சில புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த முடிந்ததைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சி வேறில்லை.
மேற்சொன்ன என்னுடைய மூன்று புத்தகங்கள் ஒரு புறம் இருக்க, மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்த ஆண்டு வெளிவருகின்றன. என்னுடைய பதிப்பாளரான ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனமே இந்தப் புத்தகங்களையும் வெளியிடுகின்றன.
சென்னை புத்தகக் காட்சி 2023ஐ ஒட்டிய தினமொன்றில் இப்புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்ய நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.